Sunday, May 27, 2012

6 குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே -10 (பாதுகாக்கப்பட்ட காபா)

இந்த பதிவுபோட காரணமாக இருந்த பி.ஜே(P.J) வாழ்க. எதற்காக ஆங்கில எழுத்துக்களை பிராக்கட்டில் குடுத்திருக்கிறேன் என்று பார்கிறீர்களா. தமிழிலேயே எப்போதும் பி.ஜேன்னு படித்ததினால். அவரின் தளத்துக்கு போக கூகுளில் ஆன்லைபிஜே( BJ) என்று தவறாக அடித்து , வந்த தளங்களைப்பார்த்து பேஜாராகிவிட்டேன். அவரின் தளத்தை தேடி வருவது பெரும் பாலும் முஸ்லிம்களே.  இப்ப புரியுதா . அவர்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்று.
சரி நாம இஸ்லாத்தைப்பார்ப்போம்.
நம்ம அண்ணனோட தளத்துக்கு போய் மாற்றுமத கேள்விகள் என்ற பகுதியில் , பார்த்த போது ... 
ஒரு முமினின் கேள்வி.. 
“பாப்ரி மஸ்ஜித்தைக்காக்க அபாபில் பறவை வராதது ஏன்???? 

அதற்கு அண்ணன் பதில் ..
கேள்வியே தவறு என்று ஒரு போடு போட்டுவிட்டு காபாவும் மத்த மசுதிகளும் ஒன்றல்ல ( அதுவும் சரிதான். அல்லா குடியிருக்கும் வீடும் . அதைப்பார்த்து கட்டப்பட்ட மத்த மசூதிகளும் ஒன்றாகுமா?)  . மேலும் காபாவும் அதனைச்சுற்றியுள்ள எல்லையும் அபய பூமியாக அல்லாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது..காபாவை எவரும் தகர்க்க முடியாது அன்னியர்கள்  கைப்பற்றவும் முடியாது என்று குரான் கூறுகிறது .(அதாவது முகமது என்னும் அல்லா கூறுகிறார்) என்று ஐந்து குரான் வசனத்தை காட்டியுள்ளார்.


28:57இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

29:67அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

3:97அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

14:35நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

மேலே உள்ளது குரான் உளறல். 


22:40இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ  (அல்லாவுக்கு மனித உதவி தேவை. ஏம்பா எல்லா மசூதியைக்காக்கவும் அந்த பறவை அல்லாவால் அனுப்பமுடியாதா? எதற்கு மனித உதவி கடவுளுக்கு), அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.


இது ஹதிஸ் உளறல்.

1591. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (அதாவது இறுதி நாளிலாம்).
Volume :2 Book :25
இதில் என்ன உளறல் இருக்கிறது என்கிறீர்களா? .. 

Abū-Tāhir Al-Jannābī  ( இந்த காஃபிர் யார் என்று பாருங்கள்).

//
In 930, he led the Qarmatians’ most notorious attack when he pillaged Mecca and desecrated Islam’s most sacred sites. Unable to gain entry to the city initially, Abu Tahir called upon the right of all Muslims to enter the city and gave his oath that he came in peace. Once inside the city walls the Qarmatian army set about massacring the pilgrims, taunting them with verses of the Koran as they did so.[3] The bodies of the pilgrims were left to rot in the streets or thrown down the Well of Zamzam. The Kaaba was looted, with Abu Tahir taking personal possession of the Black Stone and bringing it back to Al-Hasa.//  ( மெக்கா 21  வருடங்கள்  அல்லா இல்லாமல் இருந்திருக்கிறது


He rejected and ridiculed belief in Mohammed and Islam in saying: In this world, three individuals have corrupted mankind: a shepherd, a physician and a camel-driver. And this camel-driver was the worst pickpocket, the worst prestidigitator of the three. These ideas were transmitted to Emperor Frederick II by Averroes. All three are suspected to have written The Treatise of the Three Impostors.


இதையும் படியுங்கள் .
The Black Stone, Mecca


இந்த தாக்குதல் நடந்த போது அல்லா ஏன் அபாபில் பறவைவையை அனுப்பவில்லை.  அல்லா கூறிய உறுதிமொழி இவ்வளவு தானா?

இதில் இருந்தே தெரியவில்லை .. குரான் என்பது முகமதுவின் உளறலே(. இப்ப முகமது என்ற நபர் இருந்தாரா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது).
6 comments:

Anonymous said...

தமிழன் என்ன சொல்கின்றான்? எதை நம்பச் சொல்கின்றான்? உலகம் இறைச்சி சாப்பிடும் மாட்டை தெய்வம் என கும்பிடச் சொல்கின்றானா? அல்லது கக்கூஸ் கட்டும் கல்லுக்கு முகம் செதுக்கி கும்பிடச் சொல்கின்றானா? குறை கூருவதற்கென்றே குர் ஆனை வாசிக்கின்றான். அவன் இதயத்திற்கு உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டது. அதில் உள்ள நல்லவைகளை அவன் எடுக்க வில்லை அவன் நிலமை சைத்தான் ஓதிய வேதம் போன்றானான்.. அல்லாஹ்வை விட்டு விட்டு அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட சைத்தானை தொடர்கின்றான்.

Anonymous said...

சாதி வித்தியாசம்
=====
சாதி வித்தியாசம் “கடவுள்” என்பவராலேயே ஏற்படுத்தப்பட்டது என்பது இந்து மதக்கொள்கை. “வேதங்கள்” என்பவைகளிலும், “ஸ்மிருதி கள்” என்பவைகளிலும் “கடவுள்” என்பவரின் முகத்தில் இருந்து “பிராமணன்” என்னும் சாதியும், தோளிலிருந்து “க்ஷத்திரியன்” என்னும் சாதி யும், துடையிலிருந்து “வைசியன்” என்னும் சாதியும், பாதத்திலிருந்து “சூத்திரன்” என்னும் சாதியும் பிறந்ததாகக் கூறுகின்றன. இந்த சாதி வேற்றுமையை ஆதாரமாகக் கொண்டே உயர்வு தாழ்வுகளும், தொழில்களும் கற்பிக்கப்பட்டன. ஆதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாலு வகையான சாதி வேற்றுமையே இப்பொழுது நாலாயிரக் கணக்கான சாதி வேற்றுமைகள் தோன்றி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தன.
இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இந்து மதம் பின் பற்றி வரும் இந்து மதத்தின் கொள்கை.

பல ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகத்தை ஜாதியின் பெயரைச் சொல்லி படிக்க விடாமல் முன்னேற விடாமல் ஒடுக்கி, நசுக்கி வருவது உலகில் அதை விட வேரரென்ன கொடுமை இருக்கின்றது. எத்தனை எத்தனை தலைவர்கள், வழிகாட்டிகள், அறிவாலிகள், கவிஞர்கள் வீரர்கள், மேதைகள் உருவாக விடாமல் அந்த மதம் தடுத்துள்ளது. உலகில் இந்தியாவில் உள்ள இந்து மக்களின் மத்தியில் மட்டுமே இந்த கொள்கை உள்ளது. அவர்களே அவர்களின் சமுகத்தை நசுக்கி வருகின்றனர். உலகில் தலைவர்கள் பரம்பரை, விஞ்ஞாணிகள் பரம்பரை, வீரர்கள் பரம்பரை, வழிகாட்டிகள் பரம்பரை என பரம்பரையாக வருவதில்லை. இவர்கள் எங்கே, எந்தக் குடும்பத்தில், எப்படி பிறப்பார்கள் என யாராலும் கூற முடியுமா? உலகிற்கு நல் வழிகாட்டிய பெரும் தலைவர்கள் மிக எழிய வரிய குடும்பங்களில் பிறக்க வில்லையா?

அந்த மதத்தை உலகம் ஏற்றுக் கொண்டிருந்தால் அமெரிக்காவில் இன்று பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. கருப்பர்களுக்கு ஒழிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. நெல்சன் மண்டலாவுக்கு ஐநா சபையில் பங்கு பற்ற முடியாது. உலகெங்கும் ஜாதிப்பிரட்சனை தலை விரித்தாடும்.
பிரம்மன் தலையில் இருந்து வெள்ளையர்களை படைத்தான். நெஞ்சிலிருந்து இந்தியர்களைப் படைத்தான். காலிலிருந்து ஆபிரிக்க கருப்பரைப் படைத்தான்.
அல்லது
பிரம்மன் தலையிலிருந்து ஆபிரிக்கரை படைத்தான். காலிலிருந்து இந்தியர்களைப் படைத்தான். நெஞ்சிலிருந்து வெள்ளையரைப்படைத்தான் என்றாலும் பொருந்தும் என கொள்ளலாம்.
இந்து மக்களை மட்டும் தான் பிரம்மன் இவ்வாறு படைத்தானா? அவ்வாராயின் வெள்ளையரையும், கருப்பரையும், சைனா மக்களையும் ஜப்பான் மக்களையும் எந்த தேவன் படைத்தான்???
இஸ்லாம் சொல்கின்றது. பிறப்பால் யாருமே உயர்ந்தவர்கள் அல்ல. அல்லாஹ் ஒரு ஜோடியைப் படைத்தான். அவர்களில் இருந்து உலக மக்கள்பெருகினர். இது அணைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அறிவியல் முறை ஒன்று.
மற்ற மக்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அவரவர் உரிமைகளில் தலையீடு செய்வது இல்லை. அவர்களுக்கு படிக்கலாம். முன்னேரலாம். சுயமாக தொழில் செய்யலாம். சுயமாக செயல் படலாம்.அனைத்துச் சுதந்திரங்களும் உண்டு. ஆனால் இவர்கள்போட்டு பல்லாயிரம் வருடங்களக நசுக்கி வருன்றனரே. இது பெரிய பாவம் பெரிய கொடுமை. கொடுமையிலும் கொடுமை. இப்போது புரிகின்றதா?
அது ஒரு சைத்தானின் மதம் என்று.
இவ்வாரான பிறருக்கு செய்த அநியாயங்களை, கொடுமைகளை எல்லாம் மரணத்தின் பின் விசாரணையில் அல்லாஹ் நிச்சயமாக கேட்பான். அல்லஹ்வின் விசாரணை மிக கடுமையானது. பயங்கரமானது.
இந்த கேள்விக்கு Mr தமிழன் அவர்கள் என்ன பதில் சொல்கின்றார்? இவைகளை ஆராயாமல் அவர் புத்தி எங்கே போச்சு.
பதில் பதில் பதில் ?!?!?!!!!
Islaamea nearvali

ஆனந்த் சாகர் said...

அனானி,

வேத காலத்தில் வர்ணம் என்பது மட்டுமே இருந்ததது. வேத மதத்தின்(வேத தர்மம்) நவீன பெயர்தான் இந்து மதம். இந்த வேத(இந்து) மதத்தில் உருவ வழிபாடும் சாதியும் பிற்காலத்தில் அதாவது புத்தருக்கு பல நூற்றாண்டுகள் கழித்தே உருவானது(நுழைக்கப்பட்டது). இதற்கும் வேத மதத்திற்கும் சம்பந்தமில்லை. விளக்கத்துக்கு ஆர்ய சமாஜ புத்தகங்களை படிக்கவும்.

அது சரி. இஸ்லாத்தில் சாதியும் உருவ வழிபாடும் இல்லை என்று முஸ்லிம்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் ஒரு வாதத்திக்காக அதை ஏற்றுக்கொள்வோம். இவைகள் இல்லாத இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய உலகத்திலிருந்து எத்தனை நோபல் பரிசு பெற்ற அறிவியலார்களோ மற்ற துறை அறிஞர்களோ தோன்றி இருக்கிறார்கள் என்று கூற முடியுமா? கொஞ்சம் மூளையை(இருந்தால்) பயன்படுத்தவும்.

ஆனந்த் சாகர் said...

அனானி,

என்னை பொறுத்தவரை வழிபாடு செய்வது என்பது இயற்கையை பார்த்து பயந்த ஆதிகால மனிதர்களின் மூட நம்பிக்கை. இதில் உருவ வழிபாடு செய்தால் என்ன, அரூப வழிபாடு செய்தால் என்ன? இரண்டுமே இல்லாத கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் மூட நம்பிக்கையே. ஆனால் இந்து மதம் சகிப்புத்தன்மை கொண்ட மதம். அது ஆப்ரஹாமிய மதங்களைவிட எவ்வளவோ மேல். கடவுள் இருந்தாலும் அவர் தன்னை மனிதர்கள் வழிபடவேண்டும் என்று எதிர்பாப்பாரா என்பதை கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி படித்து தெளிவு பெறவும் :

http://tamil.alisina.org/?p=329

http://iraiyillaislam.blogspot.in/2012/11/blog-post_2341.html?showComment=1352108970200#comment-c7973725327619227916

Anonymous said...

2012.12.21 ல் உலகம் அழியுமா? யார் எம்மைக் காப்பாற்றுவார்கள்?
மாபெரும் கோல் ஒன்று உலகைத்தாக்க வருகின்றதாம். அதாக்குதலால் உலகம் அழிந்து விடுமாம். இந்த ஆபத்தை மனிதனால் கட்டுப்படுத்த முடியாதாம்.
அந்த மாபெரும் ஆபத்தில் இருந்து எந்த தெய்வம் எங்களையும் நாம் வசிக்கும் பூமியையும் காப்பாற்றும்.... இதைத் தடுக்க எந்த தெய்வத்துக்கு சக்தி உண்டு. எந்த தெய்வம் காப்பாற்றும். உண்மையைத் தேடும், சிந்திக்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

யார் குர் ஆனை நம்ப வில்லையோ அவர்கள் அத்தணை பேரும் இந்த வதந்தியை நம்பி பீதி கொள்வார்கள் . குர் ஆனை நம்பியவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறான அழிவு ஒன்று பூமிக்கு இல்லை என அறிவார்கள். அல்லாஹ் தன் குர் ஆனில் உலகம் அழியும் முன்னால் சில அடையாலங்களைக் குறிப்பிடுகின்றான். அவைகள் நடை பெறாமல் இந்த உலகம் அழியாது. அவைகள் இன்னும் நடை பெற வில்லை. அவைகள் எப்போது நடை பெறும் என அவன்தான் அறிவான்.
பூமி சகல வெளி ஆபத்துக்கள்லிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளது. அல்லாஹ் தன் குர் ஆனில் கூறுகின்றான்
21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
மேலும் விபரங்களுக்கு குர்ஆனை ஒரு முறை வாசிக்கவும்.
உலகம் அழியும்போது அந்த நாளின் அந்த பயங்கரத்தை விளக்குகின்றான்,
உலக முடிவின்போது

81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும் போது.
(இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் இவ்வசனத்தைக் கூறுவதானால் ஜெட் விமானங்கள் விலை உயர்ந்த வாகனங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது)
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9.“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?”
(இன்று-பெண் குழந்தைகளை கருவிலேயே கரைத்து விடுகின்றனர்) 81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

Anonymous said...


82:1. வானம் பிளந்து விடும்போது-
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. மண்ணறைகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:9. இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:10. நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:11. (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:12. நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13. நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:14. இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:15. நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
82:16. மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்
86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
20:82. “எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
22:56. அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்.
ஆகவே 21.12.12 ல் எந்த வித ஆபத்தும் பூமிக்கு வராது. 2013 புது வருடம் வழமை போல் பிறக்கப்போகின்றது.
Happy New Year என வாழ்த்தத்தான் போகின்றீர்கள்.

குர் ஆன் பாலைவனத்து உலரல்கள் அல்ல.

H. Munawwar

Post a Comment