Thursday, September 29, 2011

39 இஸ்லாமிய மூட நம்பிக்கை !!!

   இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது உஜிலா தேவி தளத்தில் பேய்களைப்பற்றிய பதிவு வந்த போது . அப்துல் ரஹமான் என்னும் நண்பர் , இது சுத்த மூட நம்பிக்கை.  //ஆகவே, மனோதத்துவ ரீதியாக, இல்லாத ஒன்றை இருக்கிறது என்று வாதிடுபவர்கள், ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே!!! மேலும், அதற்கு கையுண்டு - காலுண்டு என்று வாதிடுபவர்கள் எந்த வித மனநிலையில் இருப்பவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை..// 


 நான் பேய்கள் இருக்கிறது, இல்லை என்ற வாதத்துக்கு வரவில்லை. இந்துக்களிடையே மூட நம்பிக்கை இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் இவர் கூறுவது இஸ்லாமில் எந்த ஒரு மூட நம்பிக்கையும் இல்லாத மாதிரியும் , பேயை நம்பும் ஹிந்துகள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும்..../
 அதனால் அந்த பின்னூட்டத்தில் நான் அவர்களின் நம்பிக்கையை பற்றி எழுதினேன்.  

கீழே உள்ளது முஸ்லிம்கள் நம்புவது...


சவம் அடக்கம் செய்யப்பட்டவுடன் நீல நிறக் கண்களுடைய இரண்டு கருப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர், மற்றொருவர் நகீர். அவ்விருவரும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து) ‘இந்த மனிதர் பற்றி நீர் என்ன கூறிக் கொண்டிருந்தீர்?’ என்று கேட்பார்கள்.’இவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்’ என்று தான் கூறிக் கொண்டிருந்ததாகக் கூறுவார். அதற்கு அவ்விருவரும் ‘இவ்வாறே நீர் கூறிவந்தீர் என்பதை நாம் அறிவோம்’ என்று கூறுவர். பின்னர் அவரது அடக்கத் தலம் எழுபதுக்கு எழுபது முழமாக விரிவு படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்றப் படும். பிறகு அவரிடம் ‘நீர் உறங்குவீராக’ என்று கூறப்படும். அப்பேது அவர் ‘நான் என் குடும்பத்தினரிடம் சென்று இதைக் கூறவேண்டும்’ என்பார். அப்போது அவ்விருவரும் ‘நெருக்கமான குடும்பத்தினர் தவிர மற்றவர் எழுப்பமுடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக!’ என்று கூறுவர். அவன் முனாஃபிக்காக இருந்தால் (மேற்கண்ட அதே கேள்விக்கு விடையளிக்கும்போது) ‘மக்கள் சொல்வதைச் செவியுற்று அதையே நானும் கூறினேன். (வேறெதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அதற்கு அவ்விருவரும் ‘நீ அவ்வாறுதான் கூறி வந்தாய் என்பதை நாம் அறிவோம்’ என்று கூறுவர். பூமியை நோக்கி ‘இவரை நெருக்கு’ என்று கூறப்படும். அது அவனை நெருக்கும். அதனால் அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 991..


புகாரி ஹதீஸ்

1374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்..."அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்... 
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை" என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்." 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :231372. மஸ்ரூக் அறிவித்தார். 

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள். 
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. 

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். 
Volume :2 Book :23  இறந்தவுடன் அந்த மலக்குகள் அல்லாவைப்பற்றி மட்டும் கேட்டவில்லை ..அவர்கள் கேட்பது முகமதுவைப்பற்றி. நீங்கள் அல்லாவை மட்டும் நம்பினால் பயனில்லை. முகமது அல்லாவின் தூதன் என்பதையும் நம்பவேண்டும். இல்லை என்றால் சவப்பெட்டி அந்த இறந்து போனவரின் உடலை நசுக்கி ,அதன் எலும்புகள் நொருக்கப்பட்டு மறுமை நாள் வரையில் வேதனையில் இருக்கும்.  இறந்து போனவர் முஸ்லிமாக இருந்தால் அந்த சவப்பெட்டி 70x70 முழமாக விரிவுபடுத்தப்பட்டு அதில் விளக்கு ஏற்றப்படுமாம் அதில் அந்த சவம் புது மணமகன் மாதிரி உறங்குமாம்.  
  
இது இஸ்லாமிய பகுத்தறிவு!!!. 
1. இறந்து போன காஃபிரின் உடலுக்கு வலி தெரியும்.(அப்படியா?)
2. இறந்து போன முஸ்லிமின் உடல் 70x70 முழம் அகலமுள்ள சவப்பெட்டியில் வெளிச்சத்தில் ஆனந்தமாக தூங்கும். (இதனால் என்ன பயன்)


இதைவிட மூடத்தனமான நம்பிக்கை இருக்கமுடியாது. இதை எல்லா முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.


இதை வைத்து ஈமெயில் ஒன்று சுற்றிக்கொண்டுவேறு இருக்கிறது. அதை உண்மை என்று நம்பும் முஸ்லிம் கும்பலும் இருக்கிறது. கீழே படத்தில் உள்ளது கல்லறையில் நசுக்கப்பட்ட உடல் !!!  
அந்த கதையை கீழே உள்ள இனைப்பில் பார்க்கலாம்.
 http://www.paklinks.com/gs/religion-and-scripture/235528-sign-of-allah-torture-in-the-grave.html  


அது சரி இந்துக்களான நாம் தான் அல்லாவுக்கே அல்வா குடுத்து வருகிறோமே.  அதாவது . இறந்தவரை எரித்துவிட்டு சாம்பலையும் நீரில் கரைத்துவிடுகிறோமே. அப்போ அல்லா என்ன செய்வான்!!!???.  இவர்களை எப்படி தண்டிப்பது என்று பேந்த பேந்த முழித்துக்கொண்டு இருப்பான். 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அல்லாவுக்கும் அவன் தூதனுக்கும் இந்துக்கள் இருப்பதும் தெரியாது , அவர்கள் இறந்தவர்களை எரிப்பது பற்றியும் தெரியாது... இதில் வேற குரான் என்பது உலகத்துக்கேவாம்!.

39 comments:

RAJA said...

அது சரி இந்துக்களான நாம் தான் அல்லாவுக்கே அல்வா குடுத்து வருகிறோமே. அதாவது . இறந்தவரை எரித்துவிட்டு சாம்பலையும் நீரில் கரைத்துவிடுகிறோமே. அப்போ அல்லா என்ன செய்வான்!!!???. இவர்களை எப்படி தண்டிப்பது என்று பேந்த பேந்த முழித்துக்கொண்டு இருப்பான்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அல்லாவுக்கும் அவன் தூதனுக்
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அல்லாவுக்கும் அவன் தூதனுக்கும் இந்துக்கள் இருப்பதும் தெரியாது , அவர்கள் இறந்தவர்களை எரிப்பது பற்றியும் தெரியாது... இதில் வேற குரான் என்பது உலகத்துக்கேவாம்!

முஸ்லீம் முட்டாள்கள் இஸ்லாமிய மூடத்தனங்களை எல்லாம் அறிவியலாக எப்படித்தான் நம்புகிறார்களோ? இதில் ஹிந்து மதத்தை குறைகூறுவதில் குறைச்சலில்லை. முஸ்லீம்களை சிந்திக்க வைக்கும் உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Shyam said...

பொதுவாகவே மூமின்கள் முட்டாள்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு முட்டாள்களா என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்...!!!

Shyam said...

ஒரு சந்தேகம் ஒரு மூமினை புதைத்த இடத்திலேயே ஒரு காபிரையும் புதைத்து விட்டால் அல்லா என்ன செய்வார்???
(சுனாமியின் பின் பல நூற்றுக் கணக்கானோரை ஒரே குழியில் புதைத்தனரே...)

Tamilan said...

@shyam, இந்த மாதிரியெல்லாம் தப்பு தப்பா கேள்வி கேட்ககூடாது. அல்லா ஏற்கனவே ரொம்ப குழம்பி போய் இருக்கிறான். அல்லாவின் காலத்தில் இந்த மாதிரி சுனாமி வந்ததும் இல்லை. அவனுக்கு இந்த மாதிரி மொத்தமாக புதைப்பார்கள் என்றும் தெரியாது. அல்லாவுக்கு தெரிந்தது எல்லாம் பாலைவனமே.

G u l a m said...

சகோ தமிழன்
உங்கள் மீது ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
உங்கள் வலைத்தளம் வரக்கூடாதென்றே இருந்தேன்., என்ன செய்ய., உங்களின் அறிவீலித்தனமான ஆக்கம் என்னை இங்கு வரவழைத்து விட்டது.,
பரவாயில்லை., மூளையற்ற முஸ்லிம்கள் என்ற நிலைத்தாண்டி முஸ்லிம்களின் மூட நம்பிக்கைகள் என்று எழுத தொடங்கியிருக்கிறீர்கள்., நல்ல முன்னேற்றம்.,

உங்களின் ஏனைய ஆக்கம்போல் இவ்வாக்கத்திலும் தவறான புரிதல் மற்றும் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சி மிக தெளிவாய் பளிச்சிடுகிறது., இங்கு இரு கேள்விகளை மையப்படுத்தியதாக உங்கள் ஆக்கம் இருக்கிறது.,
1. இஸ்லாமியரிடத்தில் மூட நம்பிக்கை
2. தண்டிக்க வழியில்லாத கடவுள்

இப்போது நீங்கள் குறிப்பிடும் ஹதிஸ்க்கு வருவோம்.
மேற்கண்ட ஹதிஸ் சம்பவங்களில் வரும் நிகழ்வுகள் எல்லாம் நபி முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் என்பதால் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சம்பவம். அதாவது இறப்பிற்கு பின்ணுண்டான வாழ்வில் மண்ணறை முதலே ஒருவரின் செயலுக்கேற்ப தண்டனையும் / வெகுமதியும் கிடைக்கப்பெறும் என்பதை உலக மக்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்பதற்கான ஒரு படிப்பினைக்கான நபிகளாருக்கு தெரிவுறுத்தப்பட்ட சம்பவம் இது. அதனடிப்படையில் நம் வாழ்வை நல் வழியில் அமைத்து அத்தகைய இறை தண்டனையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதைப்போன்ற சம்பவங்கள் எத்தனையோ நபி முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
சரி., இதை ஒருவர் உண்மையென்று நம்புவதால் பகுத்தறிவு ரீதியான என்ன பிரச்சனை இருக்கிறது., இவ்வளவு தெளிவாக ஹதிஸை சொன்ன நீங்கள் இதை நம்புவது எந்த வகையில் மூட நம்பிக்கையாகும் என்பதை விளக்கவில்லையே

G u l a m said...

முதலில், மூட நம்பிக்கையின் அளவுகோல் என்ன தெரியுமா?
ஒரு செயலையோ அல்லது சொல்லையோ சிந்தனைரீதியாக தகுந்த காரணமின்றி தொடர்ந்து பின்பற்றி வருவதோடு அதுக்குறித்து பகுத்தறிவு ரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியாதோ அல்லது விளக்கமளிக்க தயாராக இல்லையோ அதுவே மூட நம்பிக்கையாகும்., அதுமட்டுமில்லை., மூட நம்பிக்கையே ஏற்பதால் இருவேறு தீமைகள் ஏற்படுகின்றன
1. தனி மனித ஒழுக்கக்கேடு அல்லது உடல் ரீதியான பாதிப்பு
2. பிறர் நலன் நீக்கம் மற்றும் சமுகரீதியான கேடு.,
ஆக இவற்றை மையமாக கொண்டு எதன் செயல்பாடுகள் அமைந்திருக்கிறோ அதுவே மூட நம்பிக்கையின் மூலம். - இப்போது மூட நம்பிக்கையென்றால் என்னவென்று தெளிவாய் புரிந்திருக்குமே நினைக்கிறேன்.,

ஆக நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதிஸ்கள் எவ்விகிதத்தில் மூட நம்பிக்கையெனும் வரையறைக்குள் வருகிறது?? இவ்வதிஸை உண்மையென்று நம்புவதால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என தன் மன இச்சைகளை பின்பற்றி வாழாமல் அத்தகைய தண்டனையிலிருந்து தப்பவேண்டும் என்பதற்காக தீமை செய்ய முற்படாத எண்ணமே மனித மனங்களில் மேலோங்கும் ஆக இவ்வதிஸை உண்மையெனே ஏற்பதால் தனி மனித ஒழுக்கத்தோடு பிறர் நலனும் அதிகரிக்க அல்லவா வாய்ப்பிருக்கிறது?
அப்படியில்லா விட்டால், இந்த மண்ணறை வேதனையை உண்மையென்று நம்புவதால் சமுகத்திற்கு என்ன கேடு ஏற்படும் என்பதையாவது விளக்குவீர்களா...? இன்னும் சொல்லப்போனால் இத்தகைய கப்ரு வேதனை உண்மையென்று நம்புவதால் குறிப்பாக பொது நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் தீய தகாத செயல்கள் நடைபெறுவது குறையவே செய்யும்.
நீங்கள் சும்மா வெறுமனே இஸ்லாமிய பகுத்தறிவா ? என கூறி இறந்து போன காஃபிரின் உடலுக்கு வலி தெரியும்.என்று சொல்லி பின் சவப்பெட்டியில் வெளிச்சத்தில் ஆனந்தமாக தூங்கும். (இதனால் என்ன பயன்) என்று முரண்பாட்டில் கேள்வி எழுப்புகிறீர்கள்., எவரோ ஒருவர் இடும் போட்டோக்கள் எல்லாம் இஸ்லாமிய சான்று ஆகாது., இஸ்லாமிய நம்பிக்கைக்குள் இப்போட்டோவை இணைத்து உங்களின் திரிபு வாத்திற்கு ஆதாரமாக்காதீர்கள்.

G u l a m said...

இறந்தவரை எரித்து சாம்பலை கரைத்தால்....? எவ்வளவு புத்திசாலித்தனமாக கேள்விகள்., பாவம் இதற்கு கூடவா படைத்தவனுக்கு பதில் தெரியாமல் போயிற்று.,
உங்கள் இஸ்லாமிய அறிவை வெளிச்சம் போட்டு அதுவும் இணையத்தில் காட்டியதற்கு நன்றி., அதிலும் அதை ஆதாரித்து எவ்வளவு அறிவுத்தனமான பின்னூட்டம்.,
சகோ., எரித்து சாம்பலாக்கினால் மட்டுமில்லை, கடலில் இறந்து மீனின் உணவாணவருக்கும், விபத்துக்களில் சிக்கி உருக்குலைந்தவருக்கும், தீயில் வெந்து ஆவியானவருக்கும் மண்ணறை என்பதே இல்லை.,

மேற்கண்ட ஹதிஸ்கள் செயல் காரணம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்., ஆக இவ்வதிஸ்கள் மட்டும் ஒருவரின் மரண வேதனைக்கான அளவுகோல் இல்லை., அவை மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வு குறித்த எளிய அறிவுறுத்துதலே.,
அல்லாஹ்வும் அவன் தூதரும் மொழிந்த வேதவரிகளிலும் தூதர் மொழிகளிலும் மண்ணறை வேதனை குறித்து குறிப்பிடும்போது ஒன்றை கவனிக்க தவறி விட்டீர்கள்., வேதனை செய்யப்படும் இடம் பற்றி கூறுகையில் "பர்ஸக்" எனும் அரபு வார்த்தை இடம் பெறுகிறது இதற்கு திரையிடப்பட்ட இடம் அல்லது மறைவான இடம் என்று பொருள். ஆக ஒருவரின் உடல் எந்த வழியில் இறந்தாலும் அதாவது குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டு துகள் துகளாக அவரது உடல் சிதறிக்கப்பட்டு உடலின் சிறு தசைத்துண்டு கூட கிடைக்காவிட்டாலும் அவரது ஆன்மாவும் கைப்பற்றப்பட்டு ஒரு திரை மறைவான இடத்தில் வைத்து விசாரிக்கப்படும். பின் அவர் மேற்கொண்ட வாழ்வின் அடிப்படையில் தண்டனை அல்லது வெகுமதி வழங்கப்படும்.,

நடுநிலை எண்ணம்கொண்டவர்களுக்கு இவ்விளக்கமே போதுமென்று நினைக்கிறேன்,

G u l a m said...

சகோ தமிழன் உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்று தான்.,
எந்த ஒன்றால் இவ்வுகத்திற்கு பயன்பாடு இல்லையென நாம் நம்புகிறோமோ அச்செய்கை அல்லது அந்த கொள்கை மற்றும் கோட்பாடுகளை விளித்து அது எப்படி இச்சமுகத்திற்கு ஒத்துவராது என்பதையும் விளக்கவேண்டும் அதற்கு மாற்று தீர்வாக தாம் நம்பும் செய்கைகள் அல்லது கொள்கை கோட்பாடுகள் எப்படி தனிமனித நலம் மற்றும் சமுகத்திற்கு பயனளிக்கும் என்பதை தெளிவுறுத்த வேண்டும் - இதுவே சமுகத்தின் மீது அக்கறை கொண்ட எந்த ஒரு புத்தியுள்ள மனிதனும் மேற்கொள்ளும் நடவடிக்கை, ஆனால் பாருங்கள் இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கையை விளக்கும் முன்பே நீங்கள் //இந்துக்களிடையே மூட நம்பிக்கை இல்லை என்றும் சொல்லவில்லை.// என்று ஆரம்பிக்கிறீர்கள்... எவ்வளவு தெளிவான முரண்பாடான சிந்தனை. ஆக நாம் எப்படி இருந்தாலும் பராவயில்லை அடுத்தவரை குற்றம் பிடிக்கவேண்டும், அதுவும் தப்பான வழிமுறையில் என்பதே உங்கள் போராவல். ஆக உங்கள் ஆக்கத்தால் சமுகம் பயன்பாடு பெற முடியாது எனபது தெளிவு. ஆக எதை குறித்து பொதுவில் விமர்சித்தாலும் அதற்கு முன் உங்களை நீங்களே தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.,

உலகிலேயே அடிப்படை அறிவு மட்டுமே கொண்டவர்களாக இருந்தாலும் கூட எளிதாக விமர்சிக்க முடிந்த ஒரே கொள்கை இந்து மதம் மட்டுமே., இங்குள்ள நாத்திகர்களின் தோற்றத்திற்கு இந்து மதத்தின் பெயரால் கொண்ட தவறான கடவுட்கோட்பாட்டே பிரதான காரணம்., இங்கு இந்துக்கடவுளை விமர்சிப்பதற்கு எனக்கு அனேக வழிகள் இருக்கிறது -அதுவும் அறிவுப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும்.
எனினும் எந்த இஸ்லாத்தை பற்றி நீங்கள் புரிதலின்றி விமர்சிக்கிறீர்களோ அதே இஸ்லாம் தான் பிற மத கடவுளை இழிவு படுத்தாதே என கூறி என் எழுத்துக்களுக்கு இங்கே கடிவாளம் போட்டிருக்கிறது.

ஆக தமிழன் என்ற ஒற்றை முகவரி தந்து நேர்மையற்று விமர்சிக்கும் கெட்ட பண்பை ஒழியுங்கள்., தமிழன் என்பவன் நேர்மையானவன் என உலகமெங்கும் அறியப்பட்டவன்., நானும் தமிழன் தான்., கண்களை இறுகப்பொத்தி உலகை இருட்டாக்க முயற்சிக்காதீர்கள்!!!

உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின் பால் செல்ல பிரார்த்தித்தவனாய்.,
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்

jaisankar jaganathan said...

//அது சரி இந்துக்களான நாம் தான் அல்லாவுக்கே அல்வா குடுத்து வருகிறோமே. அதாவது . இறந்தவரை எரித்துவிட்டு சாம்பலையும் நீரில் கரைத்துவிடுகிறோமே. அப்போ அல்லா என்ன செய்வான்!!!???. இவர்களை எப்படி தண்டிப்பது என்று பேந்த பேந்த முழித்துக்கொண்டு இருப்பான்.
//

நல்ல காமடி

Tamilan said...

@G u l a m , வணக்கம். நலமா. நான் உங்களிடம் அடிமைகளைப்பற்றிய பதிவுகளின் விளக்கத்தை கூறுமாறு கேட்டிருந்தேன். நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் கூறாமல் இந்த பதிவுக்கு பி.ஜே மாதிரி பதில் கூறியுள்ளீர்கள். சரி அதுவும் நல்லது தான். உங்களின் பின்னூட்டத்தை விளக்கமாக பார்க்கலாம். இப்பொழுது கொஞ்சம் பிசியாக இருப்பதால் உடனே பதில் குடுக்கமுடியாது. பொருத்திருங்கள்.

Anonymous said...

எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை உண்டு. இஸ்லாமில் மூட நம்பிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது.
//நாத்திகர்களின் தோற்றத்திற்கு இந்து மதத்தின் பெயரால் கொண்ட தவறான கடவுட்கோட்பாட்டே பிரதான காரணம்//

சிறு வயதில் இருந்தே மூளை கழுவி அடிமையாக வைத்திருக்கும் இஸ்லாம் மதத்தில் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்கள் தோன்றுவது கடினம். அப்படியிருக்க வெளியேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் கலக்க மடைத்து இஸ்லாம் தான் சிறந்தது அல்லாவை நம்புங்க என்று சவுண் விடுகிறார்கள்.

naren said...

நண்பரே. You seem to have touched a raw nerve logically in this post. i am waiting for further obfuscated comments.

Tamilan said...

குலாம் நண்பரே, வணக்கம்.
உங்களின் பின்னூட்டத்தில் உள்ள ஆக்கம்.
1. மனிதன் இறந்த பின் மறுமை நாள் வரை சுகம்/தண்டனை அடைவான். இது ஒரு இஸ்லாமிய பகுத்தறிவே.
2. இது மூட நம்பிக்கை இல்லை, ஏனென்றால் உங்களின் மூட நம்பிக்கை வரையறை படி
(1.தனி மனித ஒழுக்கக்கேடு அல்லது உடல் ரீதியான பாதிப்பு ,2.பிறர் நலன் நீக்கம் மற்றும் சமுகரீதியான கேடு).


1. மனிதன் இறந்த பின் மறுமை நாள் வரை சுகம்/தண்டனை அடைவான். இது ஒரு இஸ்லாமிய பகுத்தறிவே.
இதில் எந்தவிதமான பகுத்தறிவை நீங்கள் கண்டீர்கள் என்று கூறமுடியுமா? சவத்துக்கு வலி தெரியுமா? இல்லை சுகம் தான் தெரியுமா? மேலும் அந்த மலக்குகள் கேட்கும் கேள்வி, அல்லாவை நம்புகிறாயா, முகமதுவை நம்புகிறாயா ?-- இல்லையா உடனே பூமி இறந்த உடலை நசுக்கும். அப்படி என்றால் புதைக்கப்படும் ஹிந்து /யூத /கிறிஸ்துவ மக்களின் உடல் நசுக்கப்பட்டு வேதனையில் இருப்பார்கள். அதில் வேற இது முகமதுவுக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவமாம்? இஸ்லாமிய பகுத்தறிவின் படி மனிதர்கள் மறுமை நாளில் மீண்டும் உயிருடன் எழுப்பபட்டு சுவர்க்கமோ, நரகமோ தீர்மானிக்கப்படும். உடற்சுகம் அனுபவிக்க 72 கன்னிகள் அல்லது நரக நெருப்பில் மீண்டும் மீண்டும் புதிய தோல் குடுக்கப்பட்டு நெருப்பில் எரிவார்கள். இதன் மூலம் தெரிவது என்ன, இஸ்லாமிய பகுத்தறிவில் துன்பம்/இன்பம் அனுபவிக்க உடல் அவசியம் தேவை , ஆன்மா மட்டும் போதாது. முகமதின் பகுத்தறிவு இந்த மாதிரி இருக்கும் போது இஸ்லாமிய கோட்பாட்டின்படி அல்லாவினால் எப்படி ஹிந்துக்களை தண்டிக்க முடியும்?. இது ஒரு மூட நம்பிக்கை என்பதை புதைக்கப்பட்ட உடலை மறு நாள் தோண்டி எடுத்தாலே தெரிந்து விடும். மேலும் பல வருடங்கள் ஆகிவிட்டால் உடலே இருக்காது ஒரு சில எலும்புகளே இருக்கும் . அப்படி இருக்கும் போது மறுமை நாள் வரை புது மணமகன் மாதிரி எங்கே தூங்குவது. இதனால் தானோ இஸ்லாமில் ,புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்கக்கூடாது என்று இருப்பது?

2.இது மூட நம்பிக்கை இல்லை, ஏனென்றால் உங்களின் மூட நம்பிக்கை வரையறை படி
(1.தனி மனித ஒழுக்கக்கேடு அல்லது உடல் ரீதியான பாதிப்பு ,2.பிறர் நலன் நீக்கம் மற்றும் சமுகரீதியான கேடு)
1.இந்த மூட நம்பிக்கையால் உடல் ரீதியாக உடனடியாக பாதிப்பில்லை என்றாலும் மனதளவில் பெரும் பாதிப்பு உண்டாகும். சிறுவர்கள் இந்த மாதிரியான கதைகளை கேட்டு வளரும் போது இந்த பயம் போபியாவாக உருவாகும் வாய்ப்பு அதிகம். மற்ற மதத்து சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும் போது இந்த மாதிரியான கதைகளை , கதைகளே என்று பதுத்து உணர்ந்து (பகுத்தறிவு) ,பயம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் முஸ்லிம்களோ பெரியவர் ஆனாலும் அதே மன நிலையில் இருக்கிறார்கள்.ஏன் உங்களையே எடுத்துக்கொண்டாலும், இது சரியே என்கிறீர்கள். இந்த மண்ணரை தண்டனை இருப்பது உண்மையே என்று வாதிடுகிறிர்கள்.
2. நான் கீழே ஆங்கிலத்தில் குடுத்திருப்பது அந்த தளத்தில் coolmunda என்பவர் போட்ட பின்னூட்டம்.
//It actually brought tears to my eyes, thinking about the sins (no matter how small) that we commit and accumulate from day to day... Allah maaf farmai.//
இந்த மாதிரி பயமுறுத்தி மக்களை முட்டாள்களாக வைத்திருப்பது இஸ்லாம். //(no matter how small) that we commit and accumulate from day to day// இந்த மாதிரியான லூசுகள் தான் எடுத்தக்கெல்லாம் பயந்து சாவார்கள். கீழே குடுத்திருக்கும் லின்கில் பாருங்கள். முஸ்லிம்களின் மன நிலை தெளிவாக தெரியும்.
http://pagadu.blogspot.com/2011/08/blog-post_18.html
http://pagadu.blogspot.com/2011/09/blog-post_20.html
இந்த மாதிரியான ஆட்கள் கடைசியில் என்ன செய்வார்கள் , இந்த மாதிரி தண்டனைக்கு பயந்து சாவதைவிட , நிச்சயமான சுவர்க்க பாதையை குடுக்கும் ஜிகாதை நோக்கி போவார்கள்.

3123. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்;.....
Volume :3 Book :57

தானும் செத்து பத்து காஃபிர் செத்தால் சுவர்க்கம் நிச்சயம். இதனால தான் பாகிஸ்தானில் தினமும் குண்டு வெடிக்கிறது. பங்களாதேஷ்ல் தினமும் காஃபிர் கற்பழிப்பு நடக்கிறது.
http://ezhila.blogspot.com/2011/10/blog-post_04.html
http://ezhila.blogspot.com/2011/09/blog-post_3869.html
இந்த நம்பிக்கை மட்டுமல்ல இஸ்லாம் என்பதே ஒரு மூட நம்பிக்கை இதனால் மற்ற அனைத்து சமூகத்துக்கும் கேடுதான் . (மூட நம்பிக்கை என்றால் முட்டாள் தனமான நம்பிக்கை என்று அர்த்தம்).

Tamilan said...

@G u l a m,
/சகோ தமிழன் உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்று தான்.,
எந்த ஒன்றால் இவ்வுகத்திற்கு பயன்பாடு இல்லையென நாம் நம்புகிறோமோ அச்செய்கை அல்லது அந்த கொள்கை மற்றும் கோட்பாடுகளை விளித்து அது எப்படி இச்சமுகத்திற்கு ஒத்துவராது என்பதையும் விளக்கவேண்டும் அதற்கு மாற்று தீர்வாக தாம் நம்பும் செய்கைகள் அல்லது கொள்கை கோட்பாடுகள் எப்படி தனிமனித நலம் மற்றும் சமுகத்திற்கு பயனளிக்கும் என்பதை தெளிவுறுத்த வேண்டும்//

எனது அத்தனை பதிவுகளையும் படித்தால் நான் சொல்லவருவது உங்களுக்கு தெரியும். நான் சொல்வது இஸ்லாம் என்னும் அரேபிய ஆதிக்க கோட்பாட்டால் எந்த ஒரு நண்மையும் இல்லை . அதனால் தீமை தான் வரும். இதற்கு பதிலாக ஹிந்து மதத்தைப் புரிந்து கொண்டாலே போதும் உங்களின் வாழ்க்கை மட்டுமல்ல , இந்த உலக வாழக்கையே சுவர்க்கமாகிவிடும். 72 கன்னிகைகளை எதிர்பார்த்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
//போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை -எனது மறுப்பு
http://tamilan1001.blogspot.com/2011/05/blog-post_15.html //
இந்த பதிவை படித்து பார்த்தீர்களா - உங்களின் பதிவை மறுத்து நான் போட்ட பதிவு. அதையும் படித்து பார்த்து விட்டு வாருங்கள் விவாதிக்லாம்.

Tamilan said...

@G u l a m
// இங்குள்ள நாத்திகர்களின் தோற்றத்திற்கு இந்து மதத்தின் பெயரால் கொண்ட தவறான கடவுட்கோட்பாட்டே பிரதான காரணம்., இங்கு இந்துக்கடவுளை விமர்சிப்பதற்கு எனக்கு அனேக வழிகள் இருக்கிறது -அதுவும் அறிவுப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும். //

இது இந்து மதம் குடுத்திருக்கும் சுதந்திரம். அதனால் தான் அதை விமர்சிக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமை விமர்சித்தால் , முகமதுவின் செய்கைகளை பின்பற்றுபவர்களால் , விமர்சிப்பவர்களின் தலை போய்விடும் (இதற்கு உதாரணம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்). இந்து மதம் வேத தருமத்தை அடிப்படையாக கொண்டது. நாத்திகர்களும் , பிறமதத்தவர்களும் குறை கூறுவது புராணக்கதைகளை அடிப்படையாகவைத்து. புராணக்கதைகள் குழந்தைகளுக்கு சொல்வதற்காவும், படிக்காத பாமர மக்களுக்கு புரிய வைப்பதற்காகவும் உள்ளது. உப நிஷத்துக்களை படித்திருக்கிறீர்களா? படித்து பாருந்துகள். கடவுள் என்றால் என்ன என்று தெரியும்.
தமிழில் படிக்க -
http://brahmasutram.blogspot.com/

RAJA said...

தமிழன்
குலாமுக்கு உங்கள் பதில்கள் மிக அருமை. அறிவாளி குலாம் என்ன பதில் தருகிறார் என்று பார்ப்போம்.

Anonymous said...

fhdfxjbvbdjiudfbjjvjjnncsd

Tamilan said...

@Anony, உங்களின் பாராட்டுக்கு நன்றி.

arafath said...

குலாம் பாய் நீங்க ஏன் இந்த கேனப்பயலுக்கு பதில் குடுத்துட்டு இருக்கீங்க ? இவனுங்களுக்கு என்ன பதில் குடுத்தாலும் புரியபோறது இல்ல. "அல்லா அவர்களின் உள்ளத்தில் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்" நம்பிக்கை கொள்வதாக இருந்தால் இவர்கள் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். இவனுங்களோட இந்து மதம் இவனுங்கள எந்த அளவுக்கு கேனையனுங்களாவும் கோழைகளாவும் வச்சிருக்குங்குரத இவனுங்க நேரடி விவாதத்துக்கு வர திராணி இல்லாம ஓடி ஒளியுறதுல இருந்தே நல்லா தெரிஞ்சுக்கலாம்.

Suren said...

arafath, எங்க கடவுள் உன்னோட மனத முத்திரை குத்திட்டான்.. நீ இப்படி கேன தனம்தான் பேசுவ!

Nalliah said...

ரொக்கெட்டே விண்வெளிக்கு அனுப்பினாலும் கீழே இரண்டு எலுமிச்சை பழம் வைத்து அனுப்புபவன்தான் உண்மையான தமிழன். விஞ்ஞானிகள் என்று தம்மை அழைப்பவர்கள் கூட தமது விஞ்ஞான அறிவுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல், மூட நம்பிக்கைச் சேற்றை தமது முகத்தில் பூசிக் கொள்கின்றார்கள் .

அண்மையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக் சி.ஜி 820 புதிய ஹெலிகொப்டரை கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர் ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தபோது, புதிய வாகனங்களுக்குப் பூஜை போடும்போது சில்லுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதுபோல ஹெலிகொப்டரின் கீழ் எலுமிச்சம் பழங்கள் வைத்து நசுக்கப்பட்டன.

புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகப் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார். அதன்பின் ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன் தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து ஜி.எஸ்.எல்.வி. பி 3 ரொக்கெட்டுக்கான திட்டத்தை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார். திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.

விண்வெளிக்கு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட்டோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ரொக்கெட்டின் கிரையோஜெனிக் இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ரொக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துப் பயன் இல்லை என்று நேர்மையாக நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவில்லை.

நல்லையா தயாபரன்

Anonymous said...

Allah said "kun" so rocket failed.
Srini

மொட்டைபையன் said...

ஓ..இதுக்குத்தான் இவனுங்கள முட்டா துலுக்கன்னு சொல்லுறாங்களா....?????

Hameedu Munawwar said...

சாம்பலை நீரில் கரைத்து விட்டால் பேந்தப் பேந்த விழிப்பானோ?
இஸ்லாம் ஒரு சம்பூர்ணமான மார்க்கம். உன் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும் அயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னே பதில் கொடுக்கப்பட்டு விட்டது
நீ சாம்பலை எடுத்து சக்தி வாய்ந்த அசிட்டில் கரைத்து அதை நீர்மூழ்கிக் கப்பலில் (சப்மரின்) அட்லான்டிக் சமுத்திரத்தின் ஆழ்கடலுக்குக் கொண்டு சென்று கரைத்துவிடு, அல்லது ஆழ்கடலின் மண்ணில் புதைத்து விட்டு வா.
அல்லாஹ் ஒரே ஒரு முறைதான் அழைப்பான். இன்னாருடைய மகன் இன்னார். A யுடைய மகன் B என அவர் பெயரைச் சொல்லி அழைத்தால் அவர் எழுந்து ஓடி வருவார். அப்போது அல்லாஹ் அவரைப் பிடித்துக்கொள்வான்.. அவருக்கு தப்பி ஓட வழியே இல்லை.
அவ்வளவு சக்தி வாய்ந்த இறைவன் தான் அல்லாஹ்.
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் வானும், பூமியும், காடும், கடலும் ஒவ்வொரு அணுவும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவைகள் அவன் கட்டளைக்கு அடிபணிகின்றன. நீ தெய்வமாக கருதும் தெய்வங்களுக்கும் அல்லாஹ்வின் சக்திக்கும் மா பெரும் வித்தியாசம். அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் எதுவுமில்லை.
உன் சிந்தனைக்கு சில உண்மைகள்.
உன் தந்தை விட்ட அற்ப நீரில் இருந்து உன் தாயின் வயிற்றில் நீ உருவானாய். கண், காது, மூக்கு, கால், கை, உடல் உருப்புக்கள், உள் உருப்புக்கள் அந்த அந்த இடங்களில் சரியாகப் பொருத்தப்பட்டு பத்து மாதத்தில் ஒரு முழுக் குழந்தையாக வளர்ந்து இவ்வுலகில் நீ அவதரித்தாய். தாயின் வயிற்றில் உன்னை முழுக் குழந்தையாக வளர்த்தது எது? உன் தாய் அதற்கு சக்தி பெற்றவளா? உன் தாய்க்கு ஒரு முடி கூட உன் உடம்பில் நட சக்தி இல்லை. நீ பிறக்கும்போதே அவளிடம் உனக்கு உணவு பால் தயராக இருந்தது. அதை அவள் தான் உண்ணும் உணவில் பிரித்து எடுத்தாளா? இந்த ஒழுங்கு முறையைச் செய்தது எந்த சக்தி. உன்னை வாலிபனாக வளர்த்தது எந்த சக்தி.
அந்த அற்ப நீரை அல்லாஹ் எப்படி ஒரு தாயின் வயிற்றில் குழந்தையாக உருமாற்றுகின்றான் என ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னே தன் குர்ஆனில் விபரித்துள்ளான். அதைப் பார்த்து இன்றைய விஞ்ஞாணம் வியந்து மூக்கில் கை வைக்கின்றது.
நீ இவ்வுலகில் பிறப்பதற்கு உன் தாயும் தந்தையும் ஒர் பாலமாக செயல் பட்டார்களேயன்றி அவர்கள் உன்னைப் படைக்கவில்லை. உன்னை முதல் படைத்தவனுக்கு மீண்டும் படைப்பதற்கு எந்தச்சிரமும் இல்லை. மீண்டும் எழுப்பப் படும்போது விரல் நுனி ரேகையைக்கூட சரியாக கொண்டுவருவோம் என அல்லாஹ் தன் குர்ஆனில் கூறுகின்றான். (விரல் நுனி ரேகை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது என்பதை இப்போதுதான் விஞ்ஞாணம் கண்டுபிடித்துள்ளது)
நீ சுவாசிக்கும் மூச்சு, உண்ணும் உணவு, உன் உடம்பில் ஓடும் குருதி, தசை, எழும்பு எல்லாம் உன் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? அவைகளை உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?
அல்லாஹ் அவன் வல்லமையால் தந்தை இல்லாமலும் ஒருவரைப் படைத்தான். அவர்கள்தான் இயேசுநாதர்.
முப்பத்து மூன்று கோடி தெய்வங்கள் எனச் சொல்கின்றாய். அதில் எந்த தெய்வம் இதற்கு பதில் சொல்கின்றது.

===முனவ்வர்===

Hameedu Munawwar said...

continue from up

முப்பத்து மூன்று கோடி தெய்வங்கள் எனச் சொல்கின்றாய். அதில் எந்த தெய்வம் இதற்கு பதில் சொல்கின்றது.
இப்பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் தூரம் சுமார் ஒன்பது கோடி மைல்கள். அது ஒன்றை ஒன்று சிரிது நெருங்கினாலோ அல்லது தூரமானாலோ இப்புவியில் உயிரினங்களுக்கு வாழ முடியாது. அப்படியானால் சூரியனையும் பூமியையும் பொருத்தமான இடத்தில் வைத்தது யார்?
பல கோடி வருடங்கள் பூமி ஒரே பாதையில் ஒரு செகன்ட் வித்தியாசமாகாமல் ஒரே கட்டுப்பாட்டில் சூரியனை சுத்துகின்றதே! அது எந்த சக்தி? அதை கட்டுப்படுத்துபவன் யார்?
பூமி அதன் பாதையை விட்டு விலகுமானால் அதை மீண்டும் கொண்டு வருபவன் யார்? என அல்லாஹ் தன்குர்ஆனில் கேற்கின்றான்.
நீ வணங்கும் தெய்வங்களில் எந்த தெய்வத்துக்கு இக்கேள்விக்கு பதில் கூற முடியும்?
சிந்தித்துப்பார்!!
விண்ணுக்கும் மண்ணுக்கும் உனக்கும் நிறையத்தொடர்புகள் இருக்கின்றன. அந்ததொடர்பை ஏற்படுத்தியவன் யார்?
விண்ணையும், மண்ணையும் உன்னையும் அவன் வீணாகப்படைக்க வில்லை.
அது மட்டுமல்ல அவன் உன்னை கூர்ந்து அவதானித்துக் கொண்டும் இருக்கின்றான். மரணத்தின் பின் இவ்வுலகில் பிறந்து வாழ்ந்த மடிந்த எல்லோரையும் ஒரு நாளில் எழுப்புவான். அது மிகவும் பயங்கரமான நாளாகும். அத்தனை பேரையும் விசாரிப்பான். அவன் கேள்வி கடுமையானது. அவர்கள் வணங்கிய மற்ற தெய்வங்கள் எல்லாம் அந்நாளில் மறைந்து விடும். அன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே தனி அதிகாரம்.
கடைசியாக உன் சிந்தனைக்கு!
அல்லாஹ்வின் கேள்வி ஒன்று
இரவில் வானத்தை நட்சத்திரங்களை கொண்டு அழகு படுத்தியவன் யார்?
இப்போது புரிந்ததா உனக்கு?
நீ இப்போது என்னசெய்ய வேண்டும்?
மஞ்ஞல் கண்ணாடி போட்டுப் பார்த்தால் மஞ்ஞலாகத்தான் தெரியும். நேரான பாதையை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலில் உன் உள்ளத்தை சுத்தமாக்கு. மனதை பக்கச் சார்பற்றதாக அமைதியாக சிரிது காலத்துக்கு வைத்துக்கொள். உன் மனது பக்குவப்பட்டதும் குளித்து சுத்தமாகிய பின் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்து அமைதியாக வாசித்துப்பார்.
இன்று உலகில் விஞ்ஞாணம் வியக்க வைக்கும் எவ்வளவோ அற்புதங்களைக் கண்டு பிடித்துள்ளது. அவைகளை விட அற்புதம்தான் குர்ஆன்.
இன்னும் விபரங்கள் வேண்டுமா? பின் வரும் E mail க்கு தொடர்பு கொள்.

Sinthippom@live.co.uk
முனவ்வர்

Jiran said...

Last two posts are super comedy.

islam arabic collage (in future) said...

நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்,ஞானம் நிறைந்த நற்செய்தியாகவும் இருக்கின்றன - அல்குர்ஆன் 3:58

இவ்வாறிருக்க...
குர்ஆனில் இருக்கும் பல்வேறு வசனங்கள்,மாற்றுமதத்தவர்களுக்கு முரன்பாட்டை தருவதை நாம் அறிவோம்.

அவர்கள் குர்ஆனை எப்படிப்பட்ட புரிதலுடன் அணுகுகிறார்கள்,என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.அதை வெறும் புத்தகம்,அல்லது யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த ஒன்றெனவே அவர்களின் புரிதல் இருக்கும் என எம்மால் யூகிக்க முடிகிறது.

சரி.பின், குர்ஆனை எப்படி புரிந்து கொள்வது? இல்லை, என்ன புரியாமல் போய்விட்டது? எனற கேள்வி இப்போது உங்களுக்கு எழுந்து இருக்கும்....

இந்த இடுகைக்கான அவசியம் ஆனது,மாற்றுமத சகோதரர்களிடம் இருந்து இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் என்னை அடையும் போது,அதில் குர்ஆனின் வசனங்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கும்..

நான் அந்த வசனங்களை குர்ஆனைக் கொண்டு சரிபார்க்கும் போது,அது அவர்களின் தவறான புரிதலின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

அப்படி என்ன தவறாக புரிந்துவிட்டார்கள்.அதில் உள்ள வசனங்களை எழுத்துமாறாமல் சொல்லும் போது அதில் என்ன தவறு இருக்க முடியும்?என்றால்...

குர்ஆன் ஆனது, ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சம்பவங்களில், அதற்கு விளக்கமாக,அல்லது,அதன் தீர்வாக,அல்லது,அதில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமாக கொடுக்கப்பட்ட இறைச்செய்தி ஆகும்..

islam arabic collage (in future) said...

மனிதன் பிறந்தது முதல்,ஒவ்வொரு காலகட்டத்திலும்,கடைப்பிடித்து ஒழுக வேண்டிய,சாரம் நிறைந்த போதனைகளின் தொகுப்பாக அல் குர்ஆன் உள்ளது.

அது மனித வாழ்வின் அங்கங்களான, அன்பு,பண்பு, கற்பு,ஒழுக்கம், திருமணம்,சொத்து,வட்டி, மது,வியாபாரம்,கல்வி,அறிவு,உறவு,பெற்றோர் பராமரிப்பு,அண்டைவீட்டாருடனான ஒழுங்கு, அரசியல்,ஆளுமை, போர், நீதி, தண்டனை,வரம்புகள்,ஆணின் பெண் மீதான எல்லை,பெண்ணின் ஆண் மீதான எல்லை,மனிதனின் இறை மற்றும் உலகக் கடமை,என எண்ணில் அடங்கா வாழ்வியல் போதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்,இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோர்க்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - அல்குர் ஆன் 2:2

என அல்குர்ஆன் எத்தகையது என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

குர்ஆனில், வெளிப்படையான எளிதில் விளங்கிக் கொள்ளும் வசனங்களும் உண்டு.சிந்தித்துணரும் வசனங்களும் உண்டு.அதன் சம்பவ பின்னனியை கொண்டு விளக்கம் பெறவேண்டிய வசனங்களும் உண்டு,இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் துணை கொண்டு விளங்க வேண்டிய வசனங்களும் உண்டு.

மேலும் குர்ஆனில் கலைச்சொற்கள் மற்றும் உவமை சொற்களின் பிரயோகம் விரவிக் காணப்படும்.அவை பொருள் செறிந்த சொல்லாடலாக இருக்கும். இதை எளிதாகப் புரிந்து கொள்வது சிரமமே.இவற்றில் சில,நேரடி பொருள் தரும்.சிலவற்றை நேரடி பொருள் கொள்ளமுடியாது,

குர்ஆனை வாசிக்கும் போது,ஒருவர் இவற்றை உணர்ந்து கொள்ள முடியும்.சொல் பிரயோகம் ஆளுமையுடனும்,வித்தியாசமாகவும்,அது போன்றதொரு சொல்லாடால் வேறெங்கும் கண்டிறாததாகவும் இருக்கும்.

சில உவமைகள் பல்வேறு பொருள் கொண்டதாக இருக்கும்.அதன் பின்னனியை உணராத ஒரு நபர் தவறாகவே அதனைப் புரிந்து கொள்ள வழிப்படுவார்.

அது போல் சில வசனங்களை தனித்து பார்க்கும் போது,தவறான அர்த்தத்தை கொடுக்கும்.(அவ்வாறு ஒரு வசனத்தை மட்டும் தனித்து பார்ப்பது அறிவீனம்).அதன் முன் பின் தொடர் வசனங்களையோ,அல்லது வரலாற்று நிகழ்வுகளையோ பாராமல்,அவ்வசனத்தின் உண்மை பொருளை அறிய முடியாது.இது அனைவருக்கும் பொருந்தும்.

உதாரணமாக,ராமன் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி கொன்றான். என ராமாயணத்தின் வரிகளை படிக்கும் நான், என்ன ! ராமன் இத்துனை கோழையா? ஒருவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திரானியற்றவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்றெண்ணுவது இயல்பு.

ஆனால் அதன் பின்னனி,முழு விபரம் அறிந்த ஹிந்துக்களுக்கே தெரியும். இதை நான் ஒரு ஹிந்து சகோதரனை அடைந்து,விளக்கம் பெறாதவரை,இது கோழைத்தனமாகவும்,போரின் விதிமுறைக்கு புறம்பான காரியமாகவுமே, நம்பமுடியும்.

islam arabic collage (in future) said...

இதுபோன்றதொரு புரிதலே,குர்ஆன் குறித்து ஹிந்துக்களுக்குள்ள புரிதலாகும்.

அல்குர்ஆனின் வசனங்கள் பல்வேறு மறை பொருள்களின் துறுப்புச் சீட்டாகவும், சிந்தனைகளை தூண்டும் வாசகங்களாகவும் இருக்கும்.அவற்றை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு,அதில் ஒன்றும் புலப்படாது.சிந்தித்து உணர்பவர்களுக்கு,அதில் பல்வேறு படிப்பினைகள் உண்டு.

உதாரணமாக:

யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ,அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்.அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை,அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென,அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான் - அல் குர்ஆன் : 4:56

இவ்வசனங்களை மேலோட்டமாக பார்க்கும் போது,இது இறைவனை நிராகரிப்போருக்கான தண்டனை பற்றிய எச்சரிக்கையாகவே உள்ளது. ஆனால் இதில் சிந்திக்க மேலும் செய்திகள் உண்டு.தோல் கருகிவிட,புதிய தோல் மாற்றி வேதனையை உணரச்செய்வேன் என அல்லாஹ் கூறுவதில் இருந்து,தோலுக்கு வலி உணர் சக்தி இருப்பதையும்,தோல் இல்லாவிட்டால் வலி தெரியாது என்பதையும் உணர முடியும்.சென்ற நூற்றாண்டு அறிவியல், மூளை மட்டுமே உடம்பின் அத்துனை வலியையும் உணர்கிறது எனக் கண்டது. தற்போது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோலே புறவலியை உணரச்செய்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.இன்றைய விஞ்ஞானம் அவ்வசனத்தை மெய்ப்பிக்கிறது.

இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்கள் நம் சிந்தனைக்கு விருந்தாவதை,குர்ஆனை கருத்தூண்றி படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

அதுபோல மனிதனை, இக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள் என அல்லாஹ் திருமறையின் பல்வேறு இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

எடுத்துக்காட்டாக - 2:164, 2:44, 2:219, 2:269, 3:191, 6:40, 6:46, 6:98, 7:57, 12:109, 6:69 - போன்ற வசனங்கள் மனிதனை குர்ஆன் வசனங்களை சிந்திக்க அறிவுறுத்துகிறது.

இது போல் எந்த மதத்தின் வேதமும்,தன்னை ஆராயச்சொல்லி,இங்ஙனம் அரைகூவல் விடுவதை
காணமுடியாது.

குர்ஆனில் வசனங்களை புரிந்து கொள்வதில் பல்வேறு படித்தரங்களை கொண்ட சில வசனங்களையும்,அதன் விளக்கங்களை உதாரணமாக பார்ப்போம்.
--
முதலில் எளிதாக புரிந்து கொள்ளும் வசனத்தை பார்ப்போம் : 2.219 -

(நபியே!) மதுபானத்தையும்,சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.நீர் கூறும் "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது.மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்)எதை செலவு செய்யவேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக)மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக.நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை (யும்,அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கிறான் - அல் குர்ஆன் 2:219


இது நமக்கு எளிதாக புரியும்.இது மதுவும் சூதாட்டமும் எத்தகையது என்றும், அதை தவிர்த்துக் கொள்ள இறக்கப்பட்ட வசனமே இதுவென்றும். அதுபோக தர்மம் சம்பந்தமாக விளக்கமும் உள்ளது.இதை அறிந்து கொள்ள பெரிய அறிவாற்றல் தேவை இல்லை.

islam arabic collage (in future) said...

அடுத்து சற்றே,சிந்தித்துணரவேண்டிய வசனத்தை பார்ப்போம் - 2.164 -

நிச்சயமாக வானங்களையும்,பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்,இரவும்,பகலும், மாறி மாறி, வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தருவதைக் கொண்டு,கடலில் செல்லும்,கப்பல்களிலும்,வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்,அதன் மூலம் எல்லாவிதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும்,காற்றுகளை மாறி,மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன - அல்குர்ஆன் 2:164

மேற்குறிப்பிட்ட வசனமானது,மனிதர்களால் இயலாத,ஆனால் உலகில் இயல்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும் காரியங்களை எடுத்துக் காட்டுகிறது. இதில் இறுதியாக உள்ள அடைப்புக்குறி விளக்க வாசகமான (அல்லாஹ்வுடைய வல்லமையையும்,கருணையையும் எடுத்துக் காட்டும்) இதை எடுத்து விட்டால்.இவ்வசனம் எதை எதற்கு சான்றாக்குகிறது? என்பது சிந்திக்க வேண்டிய பொருளாகிறது.சிந்திக்கும் போது,இவை யாவும் மனிதனால் நிகழவில்லை.அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் பொருட்டால் நிகழ்கிறது என்பதையும்..அதில் வானம், பூமி, கடல், மழை, அதனால் எப்படி பூமி உயிர் பெருகிறது என பல்வேறு அறிவியல் சார்ந்த சிந்தனைக்குரிய கேள்விகள்,மனிதனை சிந்திக்க சொல்லி முன்வைக்கப் படுகிறது என்பதையும் அறியமுடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததாக வரலாற்று பின்னனியின் துணையுடன் அறிந்து கொள்ளும் வசனத்தை பார்ப்போம்.9:41 -

நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி,நிறைய (ப்போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி,நீங்கள் புறப்பட்டு,உங்கள் பொருட்களையும்,உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்,இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது - அல்குர்ஆன் 9:41

இதை பார்க்கும் யாருக்கும்,என்னடா இது,இஸ்லாம் போரை,இத்தனை ஊக்குவிக்கிறது!....அதுவும்,ஆயுதம் குறைவாக இருப்பினும்,போர் செய்ய கட்டாயப்படுத்துகிறது!...என்றே விளங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இதன் வரலாற்றுப் பின்னனி,இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லான "உஹது போர்" ஐ அடிப்படையாக கொண்டது.

இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை,சுருக்கமாக பார்ப்போம்.இஸ்லாமிய ஆட்சி மதினாவில் நிலைகொண்டதும்,மக்காவாசிகளின் வியாபாரத் தொடர்புகள்,மதினாவை கடந்து செல்வது அவர்களுக்கு பிரச்சனையாக மாறியது.எனவே மதினா மீது தாக்குதல் நடத்த 3000 வீரர்கள் மற்றும் 200 குதிரைபடையுடன் மக்காவாசிகள் படையெடுத்தனர்.மதினாவை நெருங்கிய படைகள்,வடதிசையில் நகர்ந்து,உஹது மலைக்கு கிழக்கே முகாமிட்டனர்.

நபி(ஸல்)அவர்களும் தங்களது படையுடன் அன்றிரவே உஹது மலையின் அருகில் முகமிட்டு,ரோந்துக்கும் உத்தரவிட்டார்கள்.அன்று காலையில் போரை சந்திக்கும் போது தான் தெரியும்,தனது படையில் இருந்த நயவஞ்சகன் ஓருவன்,300 வீரர்களை திரும்ப அழைத்துச் சென்றுவிட்டான் என்று. சென்றவர்கள் மொத்த வீரர்களில் 3ல் 1 பங்கு விகிதத்தினர்.எனில் 1000 வீரர்களை கொண்ட இஸ்லாமிய படையே ஒட்டுமொத்தமாக திரட்டப்பட்டது எனபதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சூழலில்,போரில் பங்கு கொள்ள போதுமான வீரர்களும், ஆயுதங்களும் இல்லாத நிலையில்,வீரர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட...

அல்லாஹ் அந்த வசனத்தை(9:41) இறக்கி,அவர்களுக்கு வழிகாட்டினான்.அதன் படி போர் செய்ததாலே, இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என சொல்லலாம்..

islam arabic collage (in future) said...

வலிந்து தங்கள் மீது தொடுக்கப்பட்ட போரில் கலந்து கொள்ளாது, புறமுதுகிட்டு இருந்தால்,அது தோல்வி அடைந்ததற்கு ஒப்பாகி, இஸ்லாமிய அரசின் மதிப்பு குறைந்து,அவர்களின் மீதான எதிர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து அவர்களின் அழிவிற்கு ஏதுவாகி இருந்திருக்கும்.

ஆண்மையுள்ள யாரும் கோழைத்தனத்தையும்,புறமுதுகிடுவதையும் முற்றிலும் விரும்பமாட்டோமல்லவா? இஸ்லாம் இவ்விரண்டையும் வன்மையாக கண்டிக்கும் மார்க்கம்.வல்ல அல்லாஹ் தன் அடியார்களிடம் இத்தகைய குணங்களை வெறுக்கிறான்.அதன் பொருட்டே,அவர்களுக்கு அத்தகைய கட்டளையை பிறப்பிக்கிறான்.

இப்போது இந்த வசனம் சரியென புரிந்து கொள்ள முடியுமல்லவா?

ஆக,இது இன்றைய காலத்தில் வரலாற்று பின்னனி இன்றி பார்ப்பவருக்கு தவறாகவே தெரியும். எனவே இது போன்ற ஒரு வசனத்துக்கு,பெரும் வரலாற்று பின்னனி உண்டு என்பதை புரிந்து அதை அறிய முயல்வதேஅறிவார்ந்த செயல் ஆகும்.

குறிப்பாக ஜிகாத் குறித்த வசனங்கள் இது போன்றதொரு நிகழ்வை ஒட்டி இறக்கப்பட்டவையே ஆகும்.அதன் உண்மை நிலை அறியாது,இஸ்லாத்தை பழிப்பது தவறாகும்.

உலக மக்களை நேர்வழியில் செலுத்த,மக்களின் வாழ்க்கை செம்மையாக அமையத் தேவையான அத்துனை போதனைகளையும்,வல்ல அல்லாஹ் இக்குர்ஆனில் பொதித்து அருளியுள்ளான்.

அதில் தவறோ,பிழையோ,முரன்பாடுகளோ இல்லை.தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தின் வேதமான,உலக மக்கள் அனைவருக்கும் உரிமையான,அல்குர்ஆனை அனைவரும் அறிந்து கொள்ள முன்வருவோம்.

Anonymous said...

ponga bass(Tamilan) Neenga romba comady pantringa allah va...

Anonymous said...

please to see anyone muslim here in this blogs ....hindu god is realy available....must see ....thirunalluaru nasa research... NASA UARS Satellite Reentry.....http://youtu.be/5laK2JopaVE
.............and thiruvannamalai sithhar.........http://youtu.be/unyP9IrcRfY

Dr.Anburaj said...

புமி உருண்டை என்பதையும், சுரிய குடும்பத்து கிரகங்களின் சஞசாரங்கள் போக்குகள் அனைத்தும் குரானக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களுக்கு நன்கு தெரியும். ஆகவேகுரானில் வானவியல் உள்ளது என்பதில் எதும்விசேசம் இல்லை. அல்லா சாமபலாக்கப்பட்டவன் பெயரைக் கூறினால் அவன் விசாரணைக்கு வந்து வீடுவான் என்றால் முஸ்லீம்கள் பிணங்களை எரிக்கக்லாமே.நிலங்கள் விலை மிக உயர்ந்த நிலையில் பிணங்களை புதைக்க ஏக்கர் கணக்கில் நிலங்களை வீணாக்குவதை தவீர்க்கலாமே.
அரேபிய நாட்டு கலாச்சாரம் அதை ஆண்டவனின் கட்டளை என்று காட்டரபி - 54 வயதில் 9 வயது சிறுமியை திருமணம் செய்தவர் - 13 மனைவிகளும் கிட்டத்தட்ட 40 குமுஸ் பெண்களை -யத்தத்தில்தோறறவர்களின் பெண்களை -வைப்பாட்டியாக வைத்திருந்தவரை- நபி என்றும் நபிகள் நாயகம் என்றும் புகழ்வது மடத்தனமாக தெரிகிறது.பகவத்கீதை இந்தியாவில் தோன்றிய ஒரு சிறந்த சமய தத்துவ நநூல் .அதுபோல் குரானும் அரேபியாவில் தோன்றிய சமய சமூக தத்துவ நூல்.இதைப்போய் குரான் மட்டும் தான் என் பீற்றிக்கொள்வது அரேபிய மேலாதிக்கத்திற்கு அடிமைத்னமாகும். மனிதம் நல்ல மனிதனாக மாற வேண்டும். இந்தியன் அரேபியனாக மாறுவதில் நன்மையில்லை. தீமைதான் மிஞசும்.

shaukath said...

சகோ உங்களை ஒன்றுக்கும் உதவாத ஓர் இந்திரிய துளியில் படைத்த இறைவன் சாம்பலாகி போனாலும் அதை பிரிக்க தெரியாதவனா pls Ans Me
\

shaukath said...

உங்களிடம் வாதம் புரிய நாங்கள்(முஸ்லிம்) தயார்.உங்கள் கேள்விக்கு பதில் வரும்.அதுபோல் நாங்கள் தொடுக்கும் கேள்விக்கு நீங்கள் தயார் எனில் தொடர்பு கொள்க

Ashak S said...
This comment has been removed by the author.
Ashak S said...

அட முட்டா பயலுவலா, இஸ்லாத்தில் இருக்கும் இதை மூட நம்பிக்கை என்றால் இதே போல் ஹிந்து மதத்திலும் இருக்கேடா? அதை என்ன என்று சொல்வாய்? மூடர்களே நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், எரித்தாலும் புதைத்தாலும் முதுகெலும்புக்குக்கு முடிவில் ஒரு சிறிய பந்து போன்ற எலும்பு உண்டு, ஆசிட் டேங்கில் கரைந்து போன பின்னும், இந்த எலும்பு மட்டும் மிஞ்சியது, இதன் மூலம் இறைவன் மனிதனை உண்டாக்க முடியும்

arun ji said...

அருமையான பதிவு. இந்துக்களின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் அறிவியல் ரீதியான உண்மை உள்ளது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்தால் புரியும்..

Post a Comment