Monday, June 6, 2011

4 முஸ்லிம்களின் மூளை - பாதுகாக்கபடவேண்டியது!! நேற்று ”ஷர்புதீன்” வலைத்தளத்தில் அவரின் பதிவுக்கு ஒரு முஸ்லிம் அன்பர் , ஷர்புதீனை மறுமை பற்றி சொல்லி பயமுறுத்தினார்... [மறுமை - என்பது இறந்தபின் . அல்லாவின் சுவர்க்கத்துகோ , அல்லாவின் நரகத்துகோ போவது -- (மறுவாழ்வு)]
 அதற்கு நான் அவரிடம் கேட்டிருந்தேன்.. 
மறுமை வாழ்வை பார்த்த யாரையாவது பார்திருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு.
//
நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ? 
லவ்ஹூல் மஹ்ஃபுள்// 

உங்களுக்கு ”லவ்ஹூல் மஹ்ஃபுள்” என்றால் என்ன என்று தெரியும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? .  அதை எழுதியது யார் அல்லாவா?  

அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா?   அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்?  என்று கேட்டேன்.  

அதற்கு அந்த முஸ்லிம் கொடுத்த பதில்..
//தமிழன் அவர்களே உங்கள் மீது அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. உங்களுக்கு மரணம் என்று வரும் போதும் சரி எனக்கு மரணம் வரும் போதும் சரி நாம் கண்டிப்பாக அந்த மறுமை நாளை சந்திப்போம்.//

  சரி , திரும்பவும் கேட்கிறேன்.  நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் -  நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....

7:179நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

இந்த அல்லா ஒரு லூசுதானே :). 

 நான் போட்ட பின்னூட்டத்தை ஷர்புதீன் எடுத்துவிட்டார்.

4 comments:

இக்பால் செல்வன் said...

நல்லதொரு பதிவு. இது இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து சமயங்களும் சொல்பவை தான். ஒருவன் FREE WILL - ஓடு வாழ்கின்றானா? இல்லை FATE -யின் அடிப்படையில் வாழ்கின்றானா ? என்பது தான் இது .. FREE WILL - யின் அடிப்படையில் வாழ்கின்றான் எனில், அங்கு FATE - என்பதே தேவை இல்லை. ஏனெனில் அவன் செய்யும் நன்மை தீமை அனைத்தும் அவனாலேயே வருவது அல்லவா? அப்படி இருக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்று ஒன்றுமே இல்லை ... !!! அனைத்தும் அவனால் நடப்பவை.. நல்லதுக்கும் கெட்டத்துக்கும் அவனே பொறுப்பு ... ஆனால் மதங்கள் FREE WILL என்பதை ஏற்பதில்லை. ஏற்கனவே எழுதப்பட்டது, தீர்மானிக்கப்பட்டது என்கின்றார்கள் ? அப்படி இருக்க ஒருவன் செய்யும் நல்லதும் கெட்டதுக்கும் எப்படி அவன் பொறுப்பாவான்.. எப்படி அவன் பாவி ஆவான் ? எப்படி அவன் நரகம் போவான் என்ற வினா எழுகின்றது அல்லவா?

அப்போ அவன் செய்யும் அனைத்தும் அவனால் செய்யப்பட்டது அல்ல மாறாக செய்விக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அதன் பாவங்களுக்கு செய்வித்தோனே பொறுப்பு அல்லவா?

இப்படி நியாயமாகக் கேட்டால் எவனும் பதில் தருவதில்லை சகோ.. அங்கே சொல்லி இருக்கு, இங்கே சொல்லி இருக்கு என உதார் மட்டுமே மிச்சம் ... !

தீதும் நன்றும் பிறர்தர வாரா என சங்கப் புலவன் பாடுகின்றான் ... அதனை உண்மை எனில் எடுத்தால் .. எழுதப்பட்டது, தீர்மானிக்கப்பட்டது எல்லாம் பொய்யே ஆகும் ...

ஷர்புதீன் said...

உங்களின் பின்னூட்டத்தை ( அவருடையதை அனுமதித்துவிட்டு ) எடுத்ததற்கான காரணத்தை கொஞ்ச நாள் கழித்து எனது இடுக்கையில் தருகிறேன்.

நீங்கள் என் தாயை திட்டினால் கூட அது குறித்து உணர்ச்சிவசப்பட முடியாது., யோசிக்கத்தான் செய்வேன், அதன் காரண காரியங்கள் குறித்து....ஆனால் அவருடைய தாயை திட்டியதாக சொல்கிறார்., அதனால் அவருக்கு பதில் கொடுக்கும் வரை உங்களுடையதை.............

RAJA said...

தமிழன் அவர்களே மிக அருமையாக ஆராய்ந்து எழுதுகிறீர்கள். உஜிலாதேவியிலும் சுப்பராக கருத்துரை தெரிவித்திருந்தீர்கள். நான் உங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தும் உங்களுடைய புதிய பதிவுகள் எனக்கு இமெயிலில் வருவதில்லை. ஏன். அதை சரிசெய்யுங்கள்.

சிவன் said...

இன்றுதான் இந்த வலைப்பூவைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது! மிகவும் அழகிய விளக்கங்களுடனும், கையில் சாட்டையுடன் விளாசித்தள்ளியுள்ளீர்கள். இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளுமே முற்றிலும் உண்மை! தொடர்ந்து எழுதுங்கள்!

Post a Comment